2021 ஜனவரி 20, புதன்கிழமை

அம்பாறையில் அடை மழை; விதைப்பு நடவடிக்கைகள் பாதிப்பு

Super User   / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தொடர்ச்சியான அடைமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பிரதேசங்கள் பலவற்றில் வெள்ள நீர் தேங்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில், வடிகான்கள் நிர்மாணப் பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலும், துப்புரவு செய்யப்படாமலும் காணப்படுவதால் மழைநீர் தேங்கி குடியிருப்புப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயமுள்ளது.

ஏற்கனவே, மாரி காலத்துக்கு முன்னர் வடிகான்களை துப்புரவு செய்வதோடு, கட்டி முடிக்கப்படாத வடிகான்களை முடித்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, பெரும் போக நெற்செய்கையின் ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது பெய்ய ஆரம்பித்துள்ள மழையானது விதைப்பு நடவடிக்கைகளைப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .