2025 ஜூலை 19, சனிக்கிழமை

மின்சார தாக்கி ஒருவர் பலி

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம்.எம்.றம்ஸான்)

கல்முனை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கல்முனை குடியை சேர்ந்த அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 58 வயதான  முஹம்மது ஹனீபா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்முனையில் இன்று காலை முதல் அடை மழை பெய்து வருவதனால்  மின்சார வயர் நிலத்தில் வீழ்ந்து கிடந்துள்ளது.

இருட்டின் காரணமாக இதனை அவதானிக்காமல் மரணித்தவரால் சென்றமையினால் மின்சார தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X