2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இராஜினாமா செய்வேன்: கல்முனை மேயர்

Super User   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(றிப்தி அலி)


கல்முனை மேயராக நான் இரண்டு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்  தலைமைத்துவம் உத்தரவிட்டால் தனது மேயர் பதவியை நான் இராஜினாமா செய்வேன் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

'நான் எப்போதும் கட்சி தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுபவன். இதன் அடிப்படையில் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் அதனை நிறைவேற்றுவதற்கு தயாரகவுள்ளேன். எனினும் இது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவமே இறுதி முடிவு எடுக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள கல்முனை மேயரின் வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களுடன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, 'அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அதற்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேயராக செயற்படுவார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதனால் 2013 நவம்பர் மாதத்துடன்  எனக்கான இரண்டு வருடம் நிறைவடைந்தவுடன் இராஜினாமா செய்வீர்களா என ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'தெரு விளக்குகளை பழுபார்த்தல்  மற்றும் கழிவுகளை அகற்றல் போன்ற செயற்பாடுகளை மட்டுமே உள்ளூராட்சி நிறுவனம் செய்யும் என மக்கள் மத்தியிலுள்ள மாயையை ஒழித்து அபிவிருத்திகளை மேற்கொள்வதே கல்முனை மாநகர சபையின் நோக்கம் என்பதை நான் செய்து காட்டியுள்ளேன். 

மாநகர சபையினை நான் பொறுப்பேற்கும் போது அச்சபை எந்தவித வருமானமற்ற நிலையிலேயே காணப்பட்டது. எனினும் தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை முன்வைத்துள்ளேன்.

அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகள் வாழும் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம்பெறுகின்றன. இதனால் அபிவிருத்தியில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் போயுள்ளது.

எனினும் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது பல தடைகள் வந்தவண்ணமுள்ளன. இந்த தடைகள் பல கோணங்களில் வருகின்றன. குறுகிய காலத்திற்கு எனது அரசியலில் ஏற்பட்ட சகிக்க முடியாதவர்களின் காழ்புணர்ச்சியின் காரணமாகவே இந்த தடைகள் வருகின்றன அதுவும் எனக்கெதிராவே வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உத்தரவிட்டால் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்வேன்.
 
எனினும் இவற்றையெல்லாம் மீறி மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய மாநகரமாக கல்முனை மாநகர சபையினை மாற்றியுள்ளேன். எனது இந்த சேவை தொடரும். கல்முனை மாநகர சபை சிக்கல் நிறைந்த ஒரு சபையாகும். மேயரின் கதிரையில் ஒரு நாளைக்கு இருப்பது ஒரு வருடத்திற்கு இருப்பதற்கு சமனாகும்' என்றார்.


  Comments - 0

 • meenavan Monday, 19 November 2012 11:43 AM

  உங்கள் இராஜினாமா என்பது பொது தேர்தலை இலக்காக வைத்தே இருக்கும் என்றால் ஆச்சரியம் இல்லை?

  Reply : 0       0

  kisam Monday, 19 November 2012 12:00 PM

  அரசியலில் முதிர்வு அடைந்துவிட்டார் சிராஷ் அடுத்த இலக்கு எம்.பி கல்முனைக்கு.

  Reply : 0       0

  rima Monday, 19 November 2012 12:10 PM

  ஸ்ரீலங்கா மஹிந்த‌ காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவரின் நடத்தை எல்லாம் இரட்டை வேடம்தான், மேயர் சிராஸ் உங்களுக்கு வச்சிட்டார் ஆப்பு, இனி நீங்கள் மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் என்ன சோன்னாலும் கேட்டு நடக்க வேண்டும்.

  Reply : 0       0

  ஜனூபர் Tuesday, 20 November 2012 04:57 AM

  காசு இருப்பவனை அரசியலில் நுழைப்பதை விடுத்து மக்கள் தொண்டனை அரசியலுக்குள் நுழைக்க வேண்டும். காசுக்காரன் மீண்டும் காசுதான் தேடுவான். மக்களைப்பார்க்க மாட்டான்

  Reply : 0       0

  Niyas Tuesday, 20 November 2012 06:14 AM

  அரசியல் முதிர்ச்சி என்பது ஓரிரு வருடங்கலில் வந்துவிடாது. அதற்கு காலம் தேவை. சிராஷ் உங்கலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அவசரப்பட வேண்டாம்.

  Reply : 0       0

  Nash Tuesday, 20 November 2012 01:59 PM

  சேவை செய்துகொன்டதாக மார் தட்டுகிறார் நமது கல்முனை மேயர். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லாயிருக்கும் என்னென்ன சேவை அவையென. அப்போதுதான் எல்லோரும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்....

  Reply : 0       0

  riyazudeen Tuesday, 20 November 2012 02:35 PM

  இதெல்லாம் எமக்கு சாதாரணமப்பா... விடுங்க சேர்... உங்கள் சேவை நாட்டுக்கு தேவை...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .