2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடும் வைபவம்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டுப் பூர்த்தியினையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் மரம் நடும் வைபவமும் துஆப் பிராத்தனை நிகழ்வும் இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை  சென்னல் கிராமம் நிலையத்தில் நடைபெற்றது .

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் நடைபெற்ற இ;நிகழ்வில்,  உதவித் தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான்,  பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன், பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,  ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயூளுக்காகவும் ஆசி வேண்டி சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மதுவின் விஷேட துஆப் பிராத்தனையும் நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .