2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மாதிரி வகுப்பறை திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான 'வேல்ட்விஷன்' அமைப்பின் நிதி உதவி மூலம் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேம்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் மாதிரி வகுப்பறையாக புனரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; 'வேல்ட்விஷன்' நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட அலுவலகரான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இவ்லியன்லிங்லர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்வுகளையும், ஆக்கங்களையும் நிகழ்வின் அதிதி பார்வையிட்டார்.

மேற்படி கலைமகள் வித்தியாலயமானது பிள்ளை நேயப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .