2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கூட்டெரு பிரயோக வயல் விழா

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

விவசாய திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் சாய்ந்தமருது – தெற்கு வீட்டுத் தோட்ட அமைப்பின் 'சேதனப்பசளை உற்பத்தி மற்றும் பிரயோகப்படுத்தும் வேலைத்திட்டத்தின்' கீழ், கூட்டெரு பிரயோக வயல் விழா நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விவசாய திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் எம்.அருணதிலக, தலைமையக உதவி விவசாய பணிப்பாளர் எச்.விக்ரமரெட்ன, அட்டாளைச்சேனை உதவி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், சாய்ந்தமருது உதவி விவசாய பணிப்பாளர் ஏ.எல்.எம்.பரீட், விவசாய போதனாசிரியர்களான எம்.வை.எம்.நியாஸ் (நிந்தவூர்), எஸ். தவநேசன் (காரைதீவு), எஸ்.எச்.ஏ.நிஹார் (பாலமுனை), அப்துல் மஜீட் (சம்மாந்துறை), எம்.செயினுலாப்தீன் (மல்வத்த), விஜயராகவன் (இறக்காமம்), உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .