2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

நாச்சிமார் ஆலயத்திலிருந்து இராணுவம் வெளியேறியது

Editorial   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பூ. லிண்டன்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து,  இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென செவ்வாய்க்கிழமை (27) அன்று வெளியேறியுள்ளனர். இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்தின் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற பக்தர்கள் தற்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர், அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலும், ஆலய வளாகத்திலிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .