2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரசவித்த குழந்தையை நிலத்தில் புதைத்த இளம் தாய் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்) 
அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் ஆண் குழந்தையை பிரசவித்து  நிலத்தில் புதைத்த இளம் தாய் ஒருவரை நேற்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தையும் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலிம் நகர் குப்பைமடு பகுதியில் உள்ள குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

குழந்தை கடந்த 26 ஆம் திகதி இறந்த நிலையில் பிறந்ததாகவும் அதனை பொலித்தின் பையிலிட்டு நிலத்தில் புதைதத்தாகவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .