2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கான வதிவிடப் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அம்பாறை அலுவலகமும் இணைந்து நடத்துகின்ற இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவ வதிவிட பயிற்சிநெறி சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியில் நடைபெற்றுவருகின்றது.

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற 3 நாள் வதிவிட பயிற்சிநெறி நாளை திங்கட்கிழமையுடன் நிறைவுறும்.

அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இளைஞர், யுவதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எம்.ஏ.சலீம், சீ.பீ.எஸ்.நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ், உதவித்திட்டமிடல் அதிகாரி கே.எல்.அன்சார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X