2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

'சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் மாணவர்கள் உரிமையை இழக்க நேரிடும்'

Kogilavani   / 2013 ஜூலை 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

'பல்கலைக்கழகங்களில் சரிவர சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் சில வேளைகளில் மாணவர்கள் உரிமையைகூட இழக்க நேரிடும். அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும்'  என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்

கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர பரீட்;சையில் 3ஏ   சித்திபெற்ற 25 தமிழ், முஸ்லிம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  நேற்று சனிக்கிழமை கல்முனை நால்வர் கோட்டம் தாமரை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'உலகத்தில்  சமாதானத்தை ஏற்படுத்த கூடிய நற்பிரஜைகளை உருவாக்கும்  இக்கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். சமுகத்தின் சொத்துக்களாக  மாணவர்கள் இருக்கின்றீர்கள். உங்களால் இந்த சமூகத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

மாணவர்களாகிய நீங்கள் வீதிக்கு சென்று போராட்டம் நடத்துகின்றீர்கள். பல்கலைக்கழகத்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர், தேவையற்ற குழப்பங்களை பல்கலைக்கழகத்தில் உருவாக்குகின்றனர். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

ஏனெனில் தற்போது நாட்டில் பல்வேறுபட்ட சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. மாணவர்களை சிறந்த வழியில் நடத்துவதற்கும் பல்கலைக் களகங்களை  இலகுவாக நடத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அந்த சட்டங்களை பல்கலைக்கழகங்களில் நாங்கள் சரிவர நிறைவேற்றுவோமானால் மாணவர்களின் உரிமையை கூட இழக்க நேரிடும்' என உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X