2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் அணைக்கட்டு அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, லகுகல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்அமுன பிரதேசத்தில்  விவசாய நீர்ப்பாசன அணைக்கட்டு அமைப்பதற்கான அங்குரார்ப்பண வேலை நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அணைக்கட்டு 35 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் சுமார் 650 ஏக்கருக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்படவுள்ளது.

அம்பாறை நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் கே.வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--