2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி வெடித்ததில் விவசாயி பலி

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன் 

திருக்கோவில், உடும்பங்குளம் வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்குச் சென்ற விவசாயியின் துப்பாக்கி வெடித்தததில் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய விவசாயியான வைரமுத்து வசந்தராஜப்பிள்ளை  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மறைத்துவைக்கபட்டிருந்த சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பான கட்டுத்துவக்கை எடுக்கும்போது  அது தவறுதலாக வெடித்ததில் இவரின் கை மற்றும் நெஞ்சுப்பகுதிகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--