2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் மத்தியமுகாம் பிரதேசத்தில்; இன்று வெள்ளிக்கிழமை காலை குளிப்பதற்காகச் சென்ற முதியவர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மத்தியமுகாம் 11ஆம் கொலனியைச் சேர்ந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும்  வெற்றிவேல் குணசேகரம் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டின் பின்பகுதியில் உள்ள கூவக் கிணற்றில் குளிப்பதற்காகச்; சென்றபோது கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். கிணற்றில் வீழ்ந்த சத்தம் கேட்டுச் சென்ற மனைவி அயலவர்களின் உதவியுடன்; இவரை மீட்டு மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹேகன முனசிங்கா தெரிவித்தார்.

இந்த நிலையில் சடலத்தை பார்வையிட்டுள்ள கல்முனை நீதிமன்ற பதில் நீதவான், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணையை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--