2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வருடாந்த பொலிஸ் பரிசோதனை

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பும் இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அதிதியட்சகர் அஜித் ரோஹன கலந்துகொண்டார்.

இங்கு உரையாறறிய அவர்,

'பொலிஸ் திணைக்களத்தின் சேவைகள் அர்த்தமுள்ளதாக மக்களை சென்றடைய வேண்டும். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உறவுப் பாலமாக பொலிஸாருடைய சேவைகள் காணப்படவேண்டும்.

பொலிஸாருக்கம் பொதுமக்களுக்கு இடையில் நல்ல பரஸ்பர புரிந்துணர்வு காணப்படவேண்டும்.

பொலிஸாரின் சேவையினால் மக்கள் கவரப்பட வேண்டும்' என்றார்.

மேலும் இந்த வைபவத்தில் பொலிஸாரினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட புதிய உணவுச்சாலையும் திறந்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--