2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

சுனாமி வீட்டுத் திட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு பியசேன எம்.பி உறுதி

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை தமிழ் பிரிவு சுனாமி வீட்டுத் திட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன உறுதியளித்துள்ளார்.

குறித்த வீட்டுத் திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார். இதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
 
இதன்போது மலசலகூட வசதிகள், தண்ணீர் வசதிகள், வடிகான் புணர்நிர்மாணம் செய்யப்படாமை, தெரு விளக்குகள் பொருத்தப்படாமை, உள்ளக வீதிகள் புணர்நிர்மானம் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என குறித்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

இது விடயமாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திக்கு கொண்டுவந்து ஒரு மாத காலத்திக்குள் நிவர்த்தி செய்து தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். இந்த வீட்டுத் திட்டத்தில் சுமார் 828 வீடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--