2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து சேதம்

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}-ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறைப் பிரதேசத்துக்குள் இன்று வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானைகள்  கல்லரிச்சல், கைகாட்டி, மலையடி கிராமம் போன்ற பிரதேசங்களிலுள்ள கடைகள், வீடுகள் மற்றும் தோட்டங்கள் என்வவற்றுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

காட்டு யானைகளின் நுழைவை அவதானித்த பொதுமக்கள் நள்ளிரவில் பலத்த அச்சத்துக்கு மத்தியில் தீப்பந்தங்கள், பட்டாசி வெடிகள் என்பவற்றை கொழுத்தி காட்டு யானைகளை விரட்டியுள்ளனர்.

இதேசமயம் பிரதேச மக்கள் சம்மாந்துறை பிரதேச செயலாளருக்கு இச்சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து பொலிஸார் மற்றும் வன விலங்க அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும் வனவிலங்கு அதிகாரிகள் யாரும் அவ்விடத்துக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--