2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகள் பாவித்த, வைத்திருந்த மூவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன் பிடித்த  மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை தன்வசம் வைத்திருந்த மூவருக்கு 9,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் மூவரையும் அம்பாறை மாவட்ட நீதவான் துமிந்த முதுகொட்டுவ முன்னிலையில்  நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் இவ்வாறு தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

தலா 3,000  ரூபா படி இவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வலைகளை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இறக்காமம், மலையடிக்குளத்தில் இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட சங்கூசி வலைகளை பாவித்து மீன்பிடித்த இருவரையும் தன்வசம் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த ஒருவரையும் தமண பொலிஸார் கைதுசெய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--