2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள்

Super User   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}-எம்.வை.அமீர்


கல்முனை பிரதி மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஓட்டப்பட்டடுள்ளன. இந்த சுவரொட்டிகள் சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதி உட்பட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிபை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே பிரதி மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக குறித்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உம்மிடம் இல்லையா?, நீதித்துறையில் பணியாற்றும் நிசாம் காரியப்பருக்கு நீதி தெரியாதா? போன்ற பல வாசகங்கள் குறித்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0

 • ummpa Friday, 25 October 2013 01:06 PM

  சுவரொட்டிகள் ஆம் நீங்கள் ஒட்டிகள் தான். நீங்கள் வயலுக்கு புதியவர்கள். நீதி தெரிந்தவர் என்பதனால்தான் இன்றுவரை அவர் அவர்கள் குடும்ப வரலாறு நிறையவே சாதித்து இருக்கிறது அதுவும்கூட தளிர்களுக்கு தெரிவதற்க்கு வாய்ப்பு இல்லை தான். தானைத்தலைவர் மறைந்துவிட்டார் அவரும் ஒரு காரியப்பர் தான் என்பதை மறந்துவிட்டீர்கள். இருந்தும் உங்கள் கோழைத்தனம் சரித்திரம் படைத்த ஊரின் மகிமை கெட்டுவிடாமல் இருந்தால் அதுவே போதும். சாய்ந்தமருது மக்கள் - முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமத்துடன் யார் வந்தாலும் வாக்குபோடும் ஒரு வங்கி. அதே நேரம் கட்சிக்கு மாறு பண்ண முயட்சிதால் அவர்களுக்கு என்ன பதிலடி என்பதை கடந்த காலத்தில் நிரூபித்தும் உள்ளார்கள். நான்கு பேர் சேர்ந்து ஊர் வாதம் பேசி அவர்கள் கதை நம்பி தம்பி தனது எதிர்காலத்தை நாசமாக்கி விட்டார். இனி வரும் காலம் எப்படி என்பதை அவர் புரிவதக்கு வெகு தூரமில்லை.

  Reply : 0       0

  x Friday, 25 October 2013 07:01 PM

  nice=

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--