S.Renuka / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரியல் நடிகையான ரேகா நாயர் அவரது தோழியான சித்ரா தற்கொலை செய்துக்கொண்டு இறந்தபோது அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசி பிரபலம் ஆனார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் சர்ச்சையான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தனுஷின் தீவிர ரசிகை, ஒருவேளை எனக்கு திருமணம் ஆகவில்லையென்றால், நான் தனுஷை திருமணம் செய்திருப்பேன். இதை அவரிடம் நேரில் ஒரு முறை கூறினேன். ஆனால் அவர் அதை சாதாரணமாக தான் எடுத்திருப்பார். ஏனென்றால் இதுபோல் அவரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் என கூறினார்.

இந்நிலையில், சமீபத்திய செவ்வியொன்றில் பேசியுள்ள ரேகா நாயர், தற்போதுள்ள சில பெண்கள், நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்..உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அப்போ எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக, அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது, உன் இடுப்பில் ஆண்கள் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ அதைவிட்டுவிட்டு ஆராயாக்கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago