2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்


மாற்றுத்திறனாளிகளின் கலை விழா நிகழ்வு நேற்று கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

'தடைகளை வெற்றி கொண்டு உள்ளீட்டு சமூகத்தினை நோக்கி பிரவேசிப்போம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டன.

கல்முனை உவஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர், திருமதி நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகரசபை  உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், திருமதி றியாஸ், சர்வோதய அமைப்பின் மாகான இணைப்பாளர் ஏ.ஜீவராஜா, பிரதிக்கல்விப்பணிப்பாளர் வீ.மைல்வாகனம், டீப்லிங் மெதடிஸ்த திருச்சபை இணைப்பாளர் அருட்சகோதரர் எஸ்.எஸ்.ஞானராஜா உட்பட கல்வி அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .