2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை மேட்டுவெளிப் பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றையும் ஆறு தோட்டாக்களையும் வைத்திருந்த நபரொருவரை ஞாயற்றுக்கிழமை(23) காலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சார்ஜன் யூ.எல்.எம்.ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அக்கரைப்பற்று 5ஆம் பிரிவைச்சேர்நதவர் என்றும் இந்நபரை திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கான நடவடிகக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .