2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பீடி கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில்  பிரதேசங்களிலுள்ள 20 கோவில்கள் உட்பட  வீடுகள், பாடசாலைகள், கடைகள் ஆகியவற்றில் கொள்ளையிட்டு வந்ததாகக் கூறப்படும் பீடி கும்பலைச் சேர்ந்த 05 பேரை புதன்கிழமை (26) காலை கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் செய்தனர். 

நீண்டகாலமாக கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்   16 வயது முதல்  20 வயதுடைய ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில்; பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்படி கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்து  அவரிடம்  விசாரணை மேற்கொண்ட நிலையில், ஏனைய 04 பேரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது  கோவில்களின் உண்டியல்களை  உடைத்து கொள்ளையிட்டமை மற்றும்   விக்கிரகங்கள் குத்துவிளக்குகள், செம்பு தாம்பாளங்கள்; உள்ளிட்ட சுமார் 10 இலட்சம்  ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

மேலும் தண்ணீர் பம்கள், கதவுக்கான நிலைகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், தங்கநகைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களையும் இவர்கள் கொள்ளையிட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

பீடிக் கும்பல் என்ற பெயரில் பொதுமக்களை தாக்குவது கத்தியால் குத்துவது மற்றும் பல்வேறு அடாவடித்தனங்களில்  இவர்கள் ஈடுபட்டுவந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கும்பல் எதிர்காலத்தில் வங்கியொன்றை கொள்ளையிடும் திட்டம் தீட்டியிருந்தமை தொடர்பில்  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .