2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை மாநகரசபையில் சுகாதார சுத்திகரிப்பு கடமையில் ஈடுபடும் தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்கள், மேற்பார்வையாளர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (2) கல்முனை மாநகரசபை கட்டட முன்றலில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையில் கடமை புரியும் சுகாதார சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் தமது கடமையினை மேற்கொள்ளும் போது பொதுமக்களாளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸாராலும் இவர்களை அடையாளம் காண்பதில் பலவிதமான பிரச்சினைகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன.

இதனை கருத்திற்கொண்டு கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் மேற்படி திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .