2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மக்களை  வலுவூட்டும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவினால் கிராமத்திற்கான உபகாரத்தேவைகள் மற்றும் நடமாடும் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (07) ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நடமாடும் சேவைகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுவிலில் எதிர்வரும் 7ஆம் திகதியும், பாலமுனையில் 15ஆம் திகதியும், அட்டாளைச்சேனையில் 16ஆம் திகதியும், தீகவாபியில் 17ஆம் திகதியுமாக நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இதன்போது காணி, வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு, நீர்ப்பாசனம், சமூர்த்தி, புவிச் சரிதவியல் திணைக்களம், மின்சாரம், கால் நடை, பொலிஸ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சமூகசேவை, கலாச்சாரம், மீன்பிடி, மலேரியா ஒழிப்பு போன்ற பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த துறை சார்ந்த அதிகாரிகளினால் மக்களின் பிரச்சினைகள் இனங்கானப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .