2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கிய சிறுமியை தேடும் பணி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு பிரதேசத்திலுள்ள சாவாறு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன  நெய்னாகாடு பிரதேசத்தைச் சேர்ந்த அறபாத் பாத்திமா சிபானா (வயது 11) என்ற சிறுமியை  தேடி வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (08) மாலை தனது வீட்டுக்கு அருகிலுள்ள மேற்படி ஆற்றில் உறவினர்களுடன் குளித்துக்கொண்டிருந்த இச்சிறுமி, திடீரென்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளாள்.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து,  ஒலுவில் கடற்படை அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இச்சிறுமியை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். 

இருப்பினும், இச்சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
 
இச்சிறுமி  ஆண்டு 5இல் கல்வி கற்று வருகிறாள்.

இதேவேளை இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கையில், மேற்படி ஆற்றில் அண்மைக்காலமாக கூடுதலான  முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் கூறினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .