2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

விதைப்பு பணிகள் ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு சிறு போக நெற்செய்கை மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் நீர்தாங்கு நிலைகளின் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளமையால் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட முடியாத நிலை தோன்றியுள்ளது.

தற்போதுள்ள நீரின் அளவினைக் கருத்தில் கொண்டு அவற்றில் குடிநீர், வனவிலங்குகளுக்கு தேவையான குடி நீர் என்பவற்றை தேக்கி வைத்து விட்டு எஞ்சிய நீரீன் அடிப்படையில் 120000 ஆயிரம் ஏக்கர் நெற்காணியில் 2014ஆம் ஆண்டு சிறுபோகத்திற்காக சுமார் 40000 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தின் சகல நீர்பாசன பொறியியலாளர் பிரிவுகளிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட விவசாயக் காணிகளின் விதைப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகினறமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X