2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சவளக்கடை பொலிஸாரின் புத்தாண்டு விளையாட்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூவின மக்களும் வாழும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும் பேணும் நோக்கில் சவளக்கடை பொலிஸாரும் அன்னமலை சக்தி இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா புதன்கிழமை(16) அன்னமலை சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மரதன் ஒட்டம், கிடுகு இழைத்தல், பலூன் உடைத்தல், மாவூதி மிட்டாய் எடுத்தல், சாக்கு ஒட்டம், தலையணை சமர், முட்டி உடைத்தல், பனிஸ் சாப்பிடுதல், சோடா குடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், வினோத உடைப் போட்டிகள் என பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

அன்னமலை சக்தி இளைஞர் கழக தலைவர் ஏ.பார்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.அமீர், சவளக்கடை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி கே.எஸ்.பத்திரண, மாவட்ட நீர் உயிரியலாளர் வீ.ரவிக்குமார், நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், விஸ்வம்பிரமஸ்ரீ கோணாமலை குருக்கள், விஸ்வம்பிரமஸ்ரீ சிவராசா குருக்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், சிறுமியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .