2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

குளித்த பெண்ணை பார்த்த கடற்படை வீரர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை மறைந்திருந்து பார்வையிட்டதாகக் கூறப்படும் கடற்படை வீரரொருவரை வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கடற்படை வீரர், முகாமுக்கு அருகிலுள்ள வீடொன்றின் கிணற்றடியில் இப்பெண் வியாழக்கிழமை (17) இரவு குளித்துக்கொண்டிருந்தபோது  வேலியின் மறைவிலிருந்து பார்வையிட்டுள்ளார். இதன்போது வீட்டிலிருந்து வெளியில் வந்த வீட்டின் உரிமையாளர் இதனைக் கண்டு சத்தமிட்டார். இச்சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அயலவர்கள் கடற்படை வீரரை மடக்கிப்பிடித்து நையப்புடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  முகாமிலிருந்து கடற்படை வீரர்கள் குறித்த கடற்படை வீரரை  முகாமுக்கு கொண்டுசென்றனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கடற்படை வீரர் மீது  நடவடிக்கை எடுக்குமாறும் அவரை கைதுசெய்யுமாறும்  பிரதேச மக்கள் முகாம் முன்பாக ஒன்றுதிரண்டு ரயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது அங்கு பதற்றம் நிலவிய நிலையில் பொலிஸார்   வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே  குறித்த கடற்படை வீரரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கைதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து  கலைந்துசென்றனர்.

கைதுசெய்யப்பட்ட கடற்படை வீரதை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--