2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நீர்முகாமைத்துவம் தொடர்பான ஆரம்பக் கூட்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று நீர்பாசன பிரிவுகளுக்கான 2014/2015ஆம் வருட மகா போக நீர்முகாமைத்துவம் தொடர்பான ஆரம்பக் கூட்டம் நேற்று (20) மாலை நடைபெற்றது.

இக் கூட்டம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கே.டீ.நிஹால் சிறிவர்தன உரையாற்றுகையில்,

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொது மிகவும் குறைவாக உள்ள காலப்பகுதியில்,  2014/2015ஆம் ஆண்டின்  மகாபோக நீர்முகாமைத்துவம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நிலைமை ஒருபோதும் ஏற்படவில்லை இருந்த போதிலும் எமது மாவட்டம் விவசாய மாவட்டம் ஆகையால் தற்போதுள்ள நீரையும் இறைவனின் கொடையான மழை நீரை நம்பியுமே இப்போக நீர்முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக விவசாயிகள் கூடுதலாக மழை நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்சியாக நீர் வழங்கப்படமாட்டாது அத்தியவசியமான சந்தர்பங்களில் மாத்திரம் நீர் வழங்கப்படும். தற்போதுள்ள நீரை முழுமையாக செலவு செய்யமுடியாது.

எதிர்வரும் சிறுபோகத்துக்கான நீரையும் இப்போதிருந்தே சேமிக்க வேண்டியுள்ளது. எமது பிரதேசத்திலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் சேமிப்புக்கு, எமது பிரதேசத்தில் பெய்கின்ற  மழை சரிவராது. ஊவா மாகாணத்தில் கூடுதலான மழை பெய்வதன் மூலமே சேமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த மகா போகத்தில் பின்வரும் ஒழுங்கின் அடிப்படையில் விவசாயத்ததை செய்ய அனுமதியளிக்கப்பட்டன அதன் பிரகாரம் குறுணல் கஞ்சி விவசாயப்பிரிவில்- 2,669 ஏக்கரும், செங்கப்படை விவசாயப்பிரிவில் -8,200 ஏக்கரும், மோறாவில் 1,2 பிரிவில்- 8,369 ஏக்கரும், பட்டம்பிட்டி பிரிவில்- 6,307 ஏக்கரும், புளக் ஜே பிரிவில்- 7,679 ஏக்கரும், வீரையடி பிரிவில்- 4,342 ஏக்கருமாக 37,566 ஏக்கர் செய்யப்படலாம்.

அத்துடன் விதைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 15.10.2014 தொடக்கம் 15.11.2014 வரைக்குள் நிறைவு பெறவேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டன.

அதனை தொடர்ந்து விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்ற காட்டு யானைகளின் பிரச்சினைகள் மற்றும் உரமானியங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கே.டீ.நிஹால் சிறிவர்தன, சம்மாந்தறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பொறியியலாளர் திருமதி எம்.எஸ்.றிப்னாஸ், கல்முனை நீர்பாசன பொறியியலாளர் எம்.திலகராஜா, அக்கரைப்பற்று நீர்பாசன பொறியியலாளர் எம்.ஐ.எம்.இப்றாஹீம் திட்டமுகாமையாளர்களான ஈ.சிவநாதன், மஹ்றூப் ஆதம், ரீ.மகேந்திரன், ஐ.எம்.பஸீர், எஸ்.செல்வராஜா தலைமைப்பீட பொரும்பாக உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் உட்பட திணைக்களங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்த கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .