2021 மார்ச் 01, திங்கட்கிழமை

குடியிருப்பு கிணற்றிலிருந்து மூன்று முதலைகள் மீட்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, தங்கவேலாயுதபுரம் கிராமம், குடியிருப்புக் காணியிலுள்ள கிணற்றிலிருந்து மூன்று முதலைகள் அம்பாறை வன விலங்கு திணைக்கள அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை(26) மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளர்கள், திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்பிலுவில் வன ஜீவராசிகள் அலுவலகத்துக்கு வழங்கிய தகவலையடுத்து  வன ஜுவராசிகள் திணைக்களத்தின் மருத்துவ பிரிவினர் மூன்று முதலைகளையும் மீட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 9, 5, 4அடி நீளமுடைய முதலைகள் மீட்கப்பட்டு அம்பாறை இக்னியாகல குளத்தில் விடப்படுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் நிலவிய வரட்சிக் காரணமாக இம்முதலைகள், நீர் தேடி வந்திருக்களாமென என தம்பிலுவில் வன விலங்கு ஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலிம் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .