2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று சாலையில் புதிய பஸ்சேவைகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை, புதிய பஸ்சேவைகளை சனிக்கிழமை (25) முதல் ஆரம்பித்துள்ளதாக அக்கரைப்பற்று சாலையின் முகாமையாளர் என்.ரீ.உமர்பாறூக் திங்கட்கிழமை(27)தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு வழியாக பிற்பகல் கொழும்புக்கும், மாலை 4.45 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வழியாக  அக்கரைப்பற்றுக்கும் ஒரு சேவையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இரவு 7.00 மணிக்கு கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று, பொத்துவில், அம்மாந்தோட்டை, காலி, மாத்தறை வழியாக எல்பிட்டிக்கும் எல்பிட்டியிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு இதேவழியாக கல்முனைக்குமான சேவையை ஆரம்பித்துள்ளது.

மற்றுமொரு சேவை அக்கரைப்பற்றிலிருந்து காலை 5.30 மணிக்கு புத்தளம், கற்பிட்டிக்கும் மாலை 4.30 மணிக்கு கற்பிட்டியிலிருந்து அக்ரைப்பற்றுக்கும் ஆரம்பித்துள்ளதாக சாலை முகாமையாளர் உமர்பாறூக் மேலும் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .