2021 மே 08, சனிக்கிழமை

செஞ்சிலுவை சங்கத்தினால் தரை விரிப்புகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தினால் அடையாளம் காணப்பட்டிருந்த கிராமங்களான மாவடியோடை, காரைக்காடு, வேப்பவெட்டுவான், தம்மானம்வெளி ஆகிய கிராமங்களில் உள்ள 88 குடும்பங்களுக்கு தரை விரிப்புக்கள் இன்று (31) விநியோகிக்கப்பட்டதாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் ரீ. வசந்தராஜா தெரிவித்தார்.


கிடுகுகளினால் வேயப்பட்ட குடிசைகளில் அல்லது தகரங்கள் போடப்பட்ட குடிசைகளில் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அநேகரது வீடுகளின் நிலம் ஒன்றில் வெறும் மண் தரையாகவோ அல்லது கழித்தரையாகவோ உள்ளது.


இவ்வாறு உக்கிப்போன கிடுகுகளையோ அல்லது சிதைந்து போன கூரைத்தகடுகளையோ மாற்றிக் கொள்ள முடியாமலேயே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர்களது துன்பத்தை தற்காலிகமாகவேனும் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக்கிளை உதவி வருவதாக வசந்தராஜா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X