Thipaan / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் மக்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை வழங்கும்; ஓர் அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பொத்துவிலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு பொத்துவில் பஹ்ரியா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்,
ஒரு சமூகத்தை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு சாமரம் வீசும் ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகத்தை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நாம் இத்தேர்தல் மூலமாக நல்ல செய்தியினை வழங்கியுள்ளோம்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து எமது சமூகத்தின் எல்லா தரப்புக்களுடனும் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை செய்து எமது ஒட்டு மொத்த ஆதரவை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி இந்த நாட்டின் இன ஒற்றுமை, சமூக பாதுகாப்பு என்பனவற்றுக்கு வித்திட்ட கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை மக்கள் மயப்படுத்திஇருக்கின்றோம்.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அந்தக் கட்சியினை உருவாக்கியதன் யதார்தத்தை மறந்து இன்றுள்ள தலைமைத்துவம் சென்று கொண்டிருப்பது மிக்க வேதனையான விடயமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களை மறந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே மக்கள் அதனைவிட்டு விலகி அவர்களின் அபிலாசைகள், தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் தீர்த்து வைக்கக் கூடியதும் மர்ஹும் அஸ்ரபின் கொள்கையினை பின்பற்றி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் எமது கட்சியிடம் வந்து சேருகின்றனர்.
30 வருடங்களாக இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து நீங்கள் அனுபவித்தது எதுவும் இல்லையென்று ஆதங்கப்படுகின்ற போது அதனை பார்த்து நாங்கள் கவலையடைகின்றோம்.
வெறுமனே பதவிகள் மட்டும் தான் தேவை என்று நினைப்பது முறையற்றதொன்றாகும்.பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்குவதற்hக நாங்கள் இங்கு வரவில்லை.
நாங்கள் கடந்து வந்துள்ள பாதையினை பாருங்கள், ஏனைய மாவட்டங்களில் இடம் பெறும் அபிவிருத்திகளை பாருங்கள், அந்த அபிவிருத்தி உங்களது காலடிக்கு வந்து விழுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை நீங்களும் பெற்றுக் கொள்ள அனைவரும் இணையும் ஒரு சந்தர்ப்பத்தை எமது கட்சி உங்களுக்கு பரிசாக கொடுக்க இருக்கின்றது.
நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் உங்களது பிரதேசத்துக்கு இந்த அபிவிருத்திகளை நாம் கொண்டுவருவோம் என்றும் அமைச்சர் கூறினார்.


4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026