2021 மே 06, வியாழக்கிழமை

இறந்த நிலையில் யானை மீட்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  நேருபுரம் தாமரைக்குளத்துக்கு அருகிலிருந்து 10 வயது மதிக்கத்தக்க  யானையொன்று இறந்த நிலையில் சனிக்கிழமை (07)  மீட்கப்பட்டதாக திருக்கோவில் பிரதேச வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த யானை  நோய் காரணமாக சில தினங்களாக உணவு உட்கொள்ளாமல் மெலிவடைந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த யானை இறந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக மிருக வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த ஒரு மாத காலப்பகுதியில் திருக்கோவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் மூன்று உயிரிழந்துள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரு யானையும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .