Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச பிரிவிலுள்ள தம்பிலுவில் கடலில் செவ்வாய்க்கிழமை (10) தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது, கடல் அலையினால் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவன் புதன்கிழமை (11) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில், குடிநிலத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பிரகாஷ்ராஜ் (வயது 17) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
தம்பிலுவில் சிவன் கோவிலுக்கு முன்பாக சடலம் கரையொதுங்கியதாகவும் இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025