2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஐ.தே.க. மேலதிகமாக இரு போனஸ் ஆசனங்களை பெறும்:ஹஸன் அலி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதற்காக  கூட்டாக இத்தேர்தலில் களம் இறங்கியுள்ளதுடன், இம்மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் மேலதிகமாக இரு போனஸ் ஆசனங்களையும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; செயலாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் கூட்டமும் சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேர்தல் மூலம் நாங்கள் உருவாக்கும்; அரசாங்கத்தில் பலமான சிறந்த சேவைகளை ஆற்றக்கூடிய இடத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமர்ந்துகொள்ளும். இந்த நிலையில், தெளிவான புரிந்துணர்வை செய்துகொண்டு அவர்களுடைய கரத்தை பலப்படுத்துவதுடன்,  கட்சியும் அதன் தனித்துவமான செல்வாக்கை நிரூபித்துக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகைகளையும் அதிகரித்துக் கொள்வதற்காக இந்த வியூகத்தை கவனமாக சிந்தித்து செய்திருக்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .