2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ. வை பேரம் பேசும் சக்தியாக மாற்ற வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 29 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும்; பலம் பொருந்திய அமைப்பாக மாற்றுவதன் மூலம் பேரம் பேசும் சக்தியாக மாற்றமுடியும். அதன் மூலம் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை அடைய முடியும் என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தை அக்கரைப்பற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பேரினவாத சக்திகள் தமிழர்களுடைய வாக்குகளை திருடும் நோக்கில் ஊடுருவியுள்ளன. ஆகவே, அற்பசொற்ப ஆசைகளுக்கு அடி பணியாமல் தமிழ்த் தேசியத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்' என்றார்.

'மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் எனது நாடாளுமன்ற மாதாந்தச் சம்பளம் முழுவதையும்; கல்விக்காக செலவிடுவேன். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும்  வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்காக மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதுடன், பெற்றோர் அற்ற  மாணவர்களின் பட்டப்படிப்புக்கான செலவையும் பொறுப்பேற்பேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .