Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 31 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை பிரதேசத்தை எதிர்காலத்தில் டெங்கு அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பது தொடர்பான துறை சார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 6 மாத காலத்துக்குள் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் 42 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மழைக் காலம் ஆரம்பித்தால் எமது பிரதேசத்தில் மிகவும் கூடுதலான முறையில் டெங்கு நோய் பரவக் கூடிய நிலை காணப்படுகின்றது.
வடிகான்கள் சீரான முறையில் அமைக்கப்படாமையினாலும் அனேகமான பிரதேசங்கள் குப்பை கொட்டும் பிரதேசமாக மாறி வருகின்றது. இது தொடர்பாக நாம் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைத்து அதனூடாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு பொதுமக்கள் அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசாங்கம் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை மாணவர்களுடாக வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களது வீட்டுச் சூழலை துப்பரவு செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிக்க வேண்டும் அதனை ஆசிரியர்கள் அவதானிக்க வெண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசம் சுகாதாரத்துறையில் ஒரு முன்மாதிரியான பிரதேசமாக பிரகடனப்படுத்துவதே எமது இலக்காகுமென்றார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025