2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நீரிழ் மூழ்கிய ஆண் சடலமாக மீட்பு

Administrator   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார் 

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் முனையாற்றில் தோணி கவிழ்ந்து, நீரில் முழ்கி உயிரிழந்த ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை(31)  காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரனைகள் மேற்கொண்ட போது நேற்று 30ஆம் திகதி ஆற்றின் மேற்கு பிரதேசமான ஊரக்கைவட்டை இருந்து நண்பர்களுடன் தோணியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, தோணி ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

அதன்போது, நீரில் முழ்கி காணாமல் போன குறித்த நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தம்பிலுவில் 01, ஆதவன் விளையாட்டு மைதான வீதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சங்கமப்போடி நித்தியராசா வயது 32 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இந்த ஆற்றில் விழுந்து பலர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .