2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் கடமைகளுக்கு தமிழ் மொழி அரச உத்தியோகஸ்தர்கள் நியமனம்

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனிபா

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கடமையாற்றுவதற்கான தமிழ் மொழி மூல அரச உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள், தபாலிடப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல ஆளணி நியமனத்துக்கு பொறுப்பான உதவி தேர்தல் தெரிவத்தாட்சி உத்தியோகஸ்தரும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.அன்வர்தீன், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளிலுள்ள 280 வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றுவதற்காக 2367 நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 87 வாக்களிப்பு நிலையங்களுக்கு 658 உத்தியோகஸ்தர்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுக்கு 606 உத்தியோகஸ்தர்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 127 வாக்களிப்பு நிலையங்களுக்கு 1,103 உத்தியோகஸ்தர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .