2021 மார்ச் 03, புதன்கிழமை

தேர்தல் கடமைகளை பொறுப்புடன் மேற்கொள்ளவும்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

'நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகஸ்த்தர்கள் அனைவருக்கும் மிக பெரிய பொறுப்பள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான கடமைகளை பிழையான முறையில் மேற்கொண்டால் எமது அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல தேசிய ரீதியிலான தேர்தல் முடிவுகளிலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது' என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கு, அம்பாரை மாவட்ட செயலக ஐ.ஏ.விக்கிரம மண்டபத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அறிவுரை வகுப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் அவதானிப்பின்படி பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகஸ்த்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தருவது குறைவாகவேயுள்ளது. 

அம்பாறை மாவட்டம் பெரிய பரந்த மாவட்டம். எனவே, சிறிய கிராமங்களிலும் வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஹாடி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கடமைக்கு செல்லும் உத்தியோகஸ்த்தர்களுக்கான ஆவணங்களும் பெட்டிகளும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். 

அங்கு நேரத்துக்கு வருகை தந்து உங்களுக்குரிய ஆவணங்களையும் பெட்டிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உரிய நேரத்துக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும். தாமதாக வருகை தந்நதால் உங்களது வருகைக்காக பல உத்தியோகத்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் தேர்தல் கடமைகளை சரியாக செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிhக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். 

அரசாங்கம் பொறுப்புமிக்க கடினமான பணிக்காக, சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகஸ்த்தர்களாக உங்ளை தெரிவு செய்துள்ளது. திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் தேர்தல் பணிகளை செவ்வனே செய்து முடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்' என தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .