Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சமூகத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதாகிவிடாது. சமூகத்திலுள்ள சகலரினதும்; பங்களிப்பும் அவசியம் என்று கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தெரிவித்தார்.
அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறைப் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'தற்போது கற்றவர்கள் முதல் பாமரர் வரையான சகல தரப்பினரும் குற்றச்செயல்களை செய்பவர்களாக காணப்படுகின்றனர். ஆனால், குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்' என்றார்.
எனவே, பொதுப் பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அவதானத்துடன் செயற்படுவதுடன், உடனுக்குடன் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க வேண்டும். சம்பவங்கள் நடைபெற்ற பின்னரே பாதுகாப்புத் தரப்புக்கு தகவல்கள் கிடைக்கின்றன. குற்றச்செயல்களை வருமுன் காப்பவர்களாக நாம் செயற்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
27 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago