2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும்:ரிஷாட்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தங்களது அமைச்சின் கீழ் பாதிப்புக்குள்ளான மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து போதுமான உதவிகளை அவசரமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டியுள்ளார்.

சேத விவரங்களை கிராம அதிகாரிகள் மூலம் பிரதேச செயலாளர்கள் கேரியுள்ளதாகவும் தெரியவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரிசாட், பிரதேச மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு உடனடியாக தாமதமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து உரிய கவனம் எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் பௌசி உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .