Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தின் மீது தாங்கள் மிகுந்த அக்கறையாக இருப்பதாக கூறும் சிலர், இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து, வரலாற்று துரோகத்தை இழைக்கப்போகின்றார்கள் என தேசிய காங்கிரசின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று (6) இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
'அம்பாறை மாவட்டம் பிரதிநிதித்துவத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று கருதும் இவர்கள், இம்மக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்திக்கொண்டு தங்களது அரசியல் பலங்களை பரீட்சிக்கவே முனைகின்றனர்.
பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய வியூகம் எதனையும் இவர்கள் வகுக்கவில்லை. மற்றவர்களை தோற்கடிப்பதற்கே வியூகங்கள் வகித்து கடுமையான பிரயத்தனங்களையும் மேற்கொண்டும் வருகின்றனர். தேசிய காங்கிரஸ் மட்டுமே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் வழியில் வியூகம் அமைத்து செயற்படுகின்றது' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .