2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் உயர்மட்டக் கூட்டம், அட்டாளைச்சேனை கட்சி காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது சம்மந்தமான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .