2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

அ.இ.ம.கா முஸ்லிம்களின் உரிமைக்குரல்: சிராஸ் மீராசாஹிப்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் உரிமைக்குரலாக இருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். 

ஒலுவிலில் நேற்று வியாழக்கிழமை (13) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வன்னியிலுள்ள தலைமை தனது அமைச்சின் மூலம் ஒலுவில் கிராமத்தில் ஒரு தையல் பயிற்சி நிலையத்தை உருவாக்கி அதில் நாற்பதுக்கும் அதிகமான யுவதிகளை பயிற்சி பெறச் செய்திருக்கும் இந்த முயற்சி அவரோடு இணைந்து அவரது கட்சியில் தேர்தல் கேட்கும் எங்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறது.

நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்வதன் காரணம் முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று அரசியலுக்கும் அம்பாறை மாவட்ட மக்களின் அரசியலுக்கும் ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கி புதிய அரசியல் யுகத்துக்கு அழைத்துச் செல்வதற்கேயாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .