Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
தனது ஐந்து பிள்ளைகளையும் அநாதரவாக கைவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற தாயையும் அவரது கள்ளக்காதலனையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை, பாலமுனை-4 ஆம் பிரிவு விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் (27 வயது) தனது 5 பிள்ளைகள் அனாதரவாக கைவிட்டு கள்ளக்காதலனுடன் இரு மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.
தாய் ஒருவர், தனது 5 பிள்ளைகளையும் கைவிட்டு சென்றுள்ளதாகவும் இதனால் பிள்ளைகள் அநாதரவாக இருப்பதாக பொலிஸாருக்கு கடந்த புதன்கிழமை (12) தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து பாலமுனை பிரதேசத்தில் வைத்து தாயும் பிள்ளைகள் அநாதரவாக்கியத்துக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்து நேற்று மன்றில் ஆஜர்படுத்தினர்.
பிள்ளைகளின் தகப்பன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் ஐந்து பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு 12 வயது என்றும் 03 பிள்ளைகள் பாடசாலை செல்வதாகவும் பிள்ளைகள் தாயின் சகோதரனின் வீட்டில் இருப்பதாகவும் 23 வயதுடைய கள்ளக்காதலன் அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025