2021 மார்ச் 04, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையிலுள்ள வயல்களில் மழை நீர்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சுழல் காற்றுடன் கூடிய மழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  உட்குளம், வளலவாய் போன்ற இடங்களிலுள்ள வயல்வெளிகளில்  நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு திடீர் என்று சுழல் காற்றுடன் கூடிய மழை ஏற்பட்டது. இந்த வயல்வெளிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் அறுவடை மேற்கொள்வதில்; தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வயல்வெளிகளிலிருந்து மழை நீரை வெளியேற்றி வருவதாகவும்  அவ்விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன், ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைப்பதிலும் சிரமம் காணப்படுவதாவும் விவசாயிகள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .