2021 மார்ச் 03, புதன்கிழமை

அக்கரைப்பற்று வலயத்தில் 258 மாணவர்கள் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(யூ.எல்.மப்றூக்)

அண்மையில் வெளியான ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 258 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸிம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 136 மாணவர்களும், அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 97 மாணவர்களும், பொத்துவில் கோட்டத்தில் 25 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இக்கோட்டங்களில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளாக அக்கரைப்பற்று அல் முனவ்வறா வித்தியாலயம் (33), அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (27), பொத்துவில் மத்திய கல்லூரி (06) ஆகியன விளங்குகின்றன.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .