Kogilavani / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெல் வயற் காணிகள் நீரில் மூழ்கியதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, தமண மற்றும் அம்பாறை ஆகிய விவசாய வலயங்களிலுள்ள காணிகளே இவ்வாறு வெள்ளத்தினால்; பாதிப்புக்குள்ளாகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை விவசாய வலயப் பிரதேசங்களில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட சுமார் 38 ஆயிரம் ஏக்கர் நெல்வயல் காணிகளில் 35 தொடக்கம் 40 வீதமானவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அட்டாளைச்சேனையிலுள்ள உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
அட்டாளைச்சேனை விவசாய வலயத்தில் - நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை-ஒலுவில், அக்கரைப்பற்று மேற்கு-ஆலிம்நகர், அக்கரைப்பற்று கிழக்கு, திருக்கோவில், தம்பிலுவில், கோமாரி, பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன.
மேற்படி பிரதேசங்களிலுள்ள நெற்செய்கைக் காணிகளில் கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கும் நவம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலங்களில் விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்கள அதிகாரிகள் விவசாயிகளுக்கு பணிப்புரையினை வங்கியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து ஒரு வார காலம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக – அட்டாளைச்சேனை விவசாய வலயத்துக்குட்பட்ட சுமார் 5 வீதமான நெல் வயல்கள் பாதிக்கப்பட்டன.
அதன் பின்னர் இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து பெய்த அடை மழையின் காரணமாக சுமார் 35 முதல் 40 வீதமான நெற் பயிர்கள் மேற்படி விவசாய வலயத்தில் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளத்தில் மூழ்கிய வயல்; காணிகள் சிலவற்றில் தற்போது வெள்ளம் வடிந்துள்ள போதும், சில பகுதிகளிலுள்ள நெல் வயல்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
அதேவேளை, வெள்ளத்தில் மூழ்கிய சில காணிகளிலுள்ள நெற்பயிர்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
USM Wednesday, 30 November 2011 06:52 PM
வெள்ளம் வருமுன் அணை கட்டுங்கள்.....
உரிய முறையில் தான தர்மம் செய்யுங்கள் அதுவே வெள்ள அழிவை தடுக்க அனயஹா இருக்கும்.... சென்ற போஹத்து நெல்லை பதுக்கி வைத்து விட்டு மீண்டும விதைத்தால் இப்படி அழிவுதான் ஐயா வரும்..... கொஞ்சம் சிந்தியுங்கள்.....
Reply : 0 0
ummpa Wednesday, 30 November 2011 07:37 PM
அம்பாறை மாவட்டம் முழுவதும் வெள்ளம் ஆனால் 38000 ஏக்கர் இதில் 15000 கிட்டதட்ட பதிபடைந்துள்ளதாக தெரிவிக்கின்றீர்கள். மற்ற 127000 ஏக்கர் நிலைமை என்ன ? அப்ப சம்மாந்துறை மக்கள் காணிக்கு என்ன நடந்தது ?
Reply : 0 0
தம்பி Friday, 02 December 2011 11:11 PM
மிஸ்டர் Ummpa அவர்களே... உங்கள் கொமன்ஸ்களை அடிக்கடி பார்க்கிறேன். அதிகமானவை அரை லூசுத்தனமானவை!
அம்பாறை மாட்டத்தில் மொத்தம் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல் 01 லட்சத்து 65ஆயிரம் ஏக்கர். அதில் 30ஆயிரம் ஏக்கர் பாதிப்பு.
அட்டாளைச்சேனை வலயத்தில் செய்கை பண்ணப்பட்ட 38ஆயிரம் ஏக்கர்களில் 40வீதம் - அதாவது கிட்டத்தட்ட 15ஆயிரம் ஏக்கர் பாதிப்பு.
அப்படியென்றால் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய 01 லட்சத்து 27ஆயிரம் ஏக்கர்களில் 15 ஏக்கர் பாதிப்படைந்துள்ளன.
செய்தியில் முழு விபரமும் இருக்கும் போது, சும்மா - உளறாதீர்கள்!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026